1. Home
  2. தமிழ்நாடு

BIG NEWS:- சென்னை அண்ணா சாலையில் பயங்கர தீ விபத்து..!

BIG NEWS:- சென்னை அண்ணா சாலையில் பயங்கர தீ விபத்து..!


சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் அருகே உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் இன்று முற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கம்ப்யூட்டர் பொருட்கள் வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென கட்டடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், எழும்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து 4 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், ராட்சதக் கிரேன் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீயை அணைப்பதோடு, கட்டடத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியிலும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் கட்டடத்தில் இயங்கி வந்த கம்ப்யூட்டர் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

தீ விபத்து நேரிட்ட கட்டடத்தில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தீயை அணைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like