1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : ISS இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக சென்னையில் ஓட்டுநர் கைது!

1

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை சேர்த்து வருவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று (ஜன.28) சென்னை, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தினர்.

அந்த வகையில், சென்னை புரசைவாக்கம் அழகப்பா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடந்தது. அப்போது, தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு மற்றும் பிரச்சாரம் செய்ததாக எழுந்த பிரச்னை தொடர்பாக மயிலாடுதுறையை சேர்ந்த அல்பாசித் (26) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அல்பாசித் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றிக் கொண்டு சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது என என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கைது செய்யப்பட்ட அல்பாசித்திடம் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில், யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது? ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு யாரையெல்லாம் இவர் அனுப்பியுள்ளார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் அல்பாசித்தின் சொந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் உள்பட 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like