1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS:- ஆஞ்சநேயர் பிறப்பிடம் திருமலையே! திருப்பதி தேவஸ்தானம் நிரூபணம்!

#BIG NEWS:- ஆஞ்சநேயர் பிறப்பிடம் திருமலையே! திருப்பதி தேவஸ்தானம் நிரூபணம்!

அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் நேற்று ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருப்பதியிலும் ராமநவமி விழா சிறப்பாக நடத்தப்பட்டது. மேலும் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அதன் புத்தக பிரதியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக் கொண்டு உரையாற்றினார்.

அதில் ஆஞ்சநேயரின் பிறப்பிடமாக அஞ்சனாத்ரி இருந்தது என்பதை புராண, வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் ஆதாரங்களால் திருப்பதி தேவஸ்தானம் நிரூபித்துள்ளது. இதை வெளியிடுவதற்கு முன் அதற்கான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அந்த அறிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. ராமரின் பிறப்பிடம் அயோத்தி என்பது போல் அனுமனின் பிறப்பிடம் திருமலை அஞ்சனாத்ரி. அனுமனின் பக்தனான நான் இது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

அனுமனின் பிறப்பிடம் குறித்து ஆராய 4 மாதங்கள் அயராது உழைத்த அறிஞர்கள் குழுவுக்கு எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் விடுத்த செய்திக்குறிப்பில் இந்த புத்தகம் அறிஞர்கள் குழு புராண, வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் சான்றுகளை சேகரித்தன் மூலம் பெறப்பட்டுள்ளது.விரைவில்புத்தக வடிவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.


அனுமனின் பிறப்பு கதை ஸ்ரீமத் ராமாயணத்தின் சுந்தரகாண்டத்திலும், பல புராணங்களிலும், வெங்கடச்சால மகாத் மியத்திலும், பல இலக்கியங்களிலும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. சுந்தரகாண்டத்தில் அனுமனே தனது பிறந்த கதையை சீதாதேவியிடம் சொன்னதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, திருமலையிலும் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like