#BIG BREAKING: மிரட்டலாக வெளியான தளபதி 69' பட தலைப்பு ரிலீஸ்!

’தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு குடியரசு தினத்தன்று வெளியாவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கேவின் புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அறிவிப்பிற்காக வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகர் விஜய்யின் முதல் படமான ’நாளைய தீர்ப்பு’ போஸ்டரிலிருந்து இறுதியாக வெளிவந்த ’தி கோட்’ திரைப்படம் வரையிலான போஸ்டர்களை வேகமாக ஓட விட்டு வீடியோவின் இறுதியில் ’தளபதி 69’ ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 26ஆம் தேதி முதல் என பதிவிட்டுள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக இந்த அப்டேட் பற்றி பலரும் இணையத்தில் எழுதி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற விவாதமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்திற்கு ’நாளைய தீர்ப்பு’ என தலைப்பு வைக்கப்படுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைத்துறையினர் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகும் திரைப்படம் 'தளபதி 69'. விஜய்யின் அரசியல் வருகையை ஒட்டி இந்த படம் அவரது சினிமா வரலாற்றில் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை ஹெச். வினோத் இயக்கும் நிலையில், படத்திற்கு 'ஜன நாயகன்' என டைட்டில் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பை பார்க்கும்போதே படம் அரசியல் களம் கொண்டது என்பது உறுதியாகியுள்ளது.