உஷார்! பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பனை!!

உஷார்! பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பனை!!

உஷார்! பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பனை!!
X

திருப்பூரில் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து விற்பனை செய்வதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

காங்கேயம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போட்டுக்கொண்டு சென்ற நபரின் வண்டி சிறிது தூரம் சென்றதும் நின்றுள்ளது. அருகில் உள்ள வண்டி பழுதுபார்க்கும் கடைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக மெக்கானிக்குடன் அந்த நபர் பெட்ரோல் நிரப்பிய பெட்ரோல் நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது அலுவலர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாட்டர் கேன் ஒன்றின் பெட்ரோலை பிடித்து பார்த்தபோது அதில் கால் பங்கு தண்ணீர் இருந்தது உறுதியானது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it