உஷார்!!! மே மாதத்தில் கொரோனா தாக்கம் 10 லட்சத்தை தாண்டும்!

 | 

கொரோனா வைரஸ் மே மாதத்திற்குள் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு பரவ வாய்ப்பிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்திய - அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, மே இறுதிக்குள் இந்தியாவில் 10 முதல் 13 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்ற நாடுகளை விட சிறப்பாக இருந்தாலும், பரிசோதனை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாமல் மக்கள் பலர் உலாவக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். மேலும் இத்தனை லட்சம் மக்களுக்கு தேவையான படுக்கைகள், மருத்துவ வசதிகள் இந்தியாவில் இல்லை என்பதால் பெரும் உயிர்சேதத்தை சந்திக்க நேரிடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். '

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP