சிறப்பாக பணியாற்றினால் பென்ஸ் கார் வழங்கப்படும்! பிரபல நிறுவனம் அதிரடி!!

 | 

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக தர திட்டமிட்டுள்ளது.

உலக அளவில் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஹெச்.சி.எல். முக்கிய இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தை தொடங்கியவர் ஒரு தமிழர். ஷிவ் நாடார் என்பரே இதன் நிறுவனர். சாஃப்ட்வேர் துறையில் தொடர்ந்து கோலோச்சி வரும் ஹெச்.சி.எல் ஊழியர்களுக்கு எப்போதும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

கொரோனா பொதுமுடக்க காலத்தில் அலுவலக செலவு குறைந்ததால் ஹெச்.சி.எல் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தது. இந்நிலையில் தற்போது அதிரடியான திட்டம் ஒன்றை ஹெச்.சி.எல் வகுத்துள்ளது.

hcl

அதாவது சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக தர திட்டமிட்டுள்ளதுநிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அந்நிறுவனத்தின் உயரதிகாரி அப்பாராவ் தெரிவித்துள்ளார்.

Merc_S_class

இந்நிறுவனம் தனது பணியாளர்களை ஊக்குவிக்க பென்ஸ் கார்களை வழங்குவது முதல் முறையல்ல.கடந்த 2013ஆம் ஆண்டு 50 பணியாளர்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக அளித்துள்ளதுஇதற்கிடையில் இந்நிறுவனம் இந்தாண்டு 22 ஆயிரம் பேரை புதிதாக பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP