பியூட்டிஷியன் , மசாஜ் தொழில் கற்றுத் தருவதாக 2 நடிகைகளை அழைத்து பாலியல் தொழில்..

பியூட்டிஷியன் , மசாஜ் தொழில் கற்றுத் தருவதாக 2 நடிகைகளை அழைத்து பாலியல் தொழில்..

பியூட்டிஷியன் , மசாஜ் தொழில் கற்றுத் தருவதாக 2 நடிகைகளை அழைத்து பாலியல் தொழில்..
X

புதுச்சேரி முத்தியால்பேட்டை சேர்ந்தவர் சந்துரு ஜி. போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து பல மாநிலங்களில் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்து சிக்கியவர். தற்போது ஜாமீனில் வந்துள்ள இவர் புதுச்சேரி - விழுப்புரம் எல்லையை ஒட்டிய கோட்டகுப்பம் கடலோர பகுதியில் விடுதி ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

கொரோனாவால் சுற்றுலா பயணிகள் வராததால் விடுதி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து கோட்டக்குப்பம் போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர்.

அப்போது சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 2 துணை நடிகைகள் அடைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. அவர்களை மீட்ட போலீசார் சந்துரு ஜி, அவரது நண்பர் விஜயகுமார், விடுதி காப்பாளரான டெல்லியை சேர்ந்த அஜய் ஜோசப் ஆகிய 3 பேரை விபச்சார சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

விசாரணையில் பியூட்டிஷியன் மற்றும் மசாஜ் தொழில் கற்றுத் தருவதாக சென்னையிலிருந்து நடிகைகளை அழைத்து வந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தும் நோக்கில் அவர்கள் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 2 துணை நடிகைகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

Newstm.in

Next Story
Share it