சீன செயலிகளை தடை செய்வது மட்டும் சரியாக நடவடிக்கை அல்ல.. மம்தா பானர்ஜி காட்டம் !
சீன செயலிகளை தடை செய்வது மட்டும் சரியாக நடவடிக்கை அல்ல.. மம்தா பானர்ஜி காட்டம் !

மேற்கு வங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
அப்போது, சீனாவின் செயலிகளை இந்தியாவில் தடை செய்வது மட்டும் சரியான நடவடிக்கையாக இருக்காது. மாறாக, இந்திய வீரர்கள் மீது தாக்குதலை நடத்திய சீனாவுக்கு பொருத்தமான பதிலை வழங்க வேண்டும் என்றார்.
எனினும் இது வெளிவிவகாரத்துறை என்பதால் இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் விட்டுவிடுகிறேன். சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு மேற்குவங்க மாநில அரசு துணை நிற்கும் எனவும் அவர் கூறினார்.
மேலும், மேற்குவங்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்ததோடு, நாட்டின் 130 கோடி மக்களுக்கும் இலவச ரேஷன் பொருள்கள் கிடைக்கச் செய்வதே மத்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை நவம்பர் மாதம் இறுதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார்.
newstm.in