வங்கி கடன் !! தள்ளி வைக்கப்பட்ட காலத்துக்கு வட்டியுடன் கட்டணங்களும் சேர்த்து , வட்டி கணக்கிடப்படுமா ? நீதிபதிகள் கேள்வி

X

கடன்கள் மற்றும் கடன் தவணைகள் திருப்பிச் செலுத்துவது மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்டு 31ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் , இந்தக் காலத்துக்கான வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது , தள்ளி வைக்கப்பட்ட காலத்துக்கான வட்டியுடன் கட்டணங்களும் சேர்த்து அதற்கு வட்டி கணக்கிடப்படுமா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி விதிப்பது கவலை அளிக்கிறது என்றும் தெரிவித்தனர். வங்கிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் , கடன் தவணை காலத்தில் செலுத்திய வேண்டிய தொகைக்கு வட்டி விதிப்பது தவிர்க்க முடியாதது என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஆறு மாத தவணைத் தொகைக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய பரிசீலிக்கப்படுமா? என்பதைத் தீர்மானிக்க 3 நாட்களுக்குள் நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியும் கூடி முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Newstm.in

Next Story
Share it