ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை !! மத்திய , மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு...

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை !! மத்திய , மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு...

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை !! மத்திய , மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு...
X

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக நெல்லையைச் சேர்ந்த சிலுவை என்பவர் தொடர்ந்த வழக்கில் , ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். பணத்தை மையமாகக் கொண்டு பல ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளன. எனவே , மத்திய , மாநில அரசுகள் தேவையான சட்டங்களை இயற்றி , ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிபதி புகழேந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதித்து போல ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும். இளைஞர்களின் நேரத்தையும் சிந்திக்கும் திறனையும் ஆன்லைன் ரம்மி சீரழிக்கிறது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுகக் வேண்டும். நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

Next Story
Share it