1. Home
  2. தமிழ்நாடு

பாமக நிறுவனருக்கு வெட்கமாக இருக்கிறதாம்.. எதற்காக தெரியுமா..?

பாமக நிறுவனருக்கு வெட்கமாக இருக்கிறதாம்.. எதற்காக தெரியுமா..?


கடலூரில் நேற்று (25ம் தேதி) பாமக சார்பில் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: “10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சிறப்பான வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது. எனவே, தடை உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் தேர்தலில் பாமக வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வராக கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும்.

இதற்காக திண்ணை பிரச்சாரம், சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி மக்களிடையே செல்ல வேண்டும். 23 லட்சம் ஓட்டுகள் போட்டு 5.6 சதவீதம் பெற்றதாக கூறுகின்றனர். தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக இருப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது.

இந்த கட்சி இனி இளைஞர்களின் கைகளில்தான் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட ஆள் இல்லை என்கின்றனர். ஆளில்ல என்றால் அந்தமானில் இருந்து 50 பேரை அழைத்து வந்திருப்பேன்” என அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like