ஏ.ஆர்.ரஹ்மானை இழிவுப்படுத்திய பாலகிருஷ்ணா! தகிக்கும் இணையதளம்!!

 | 

உலகமே கொண்டாடும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்.டி.ஆரின் மகனான பாலகிருஷ்ணாவின் படத்தை ரசிகர்கள் முழுவதுமாக பார்ப்பதை விட, இணையத்தில் உலவும் அவரது ஸ்டன்ட் காட்சிகளை கலாய்ப்பது தான் அதிகம். அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் இவர் இப்போது ஏ.ஆர்.ரஹ்மானை யார் என்றே தெரியாது என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இவரது பேச்சுக்கு நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கேள்வி எழுப்பிய போது, யாரோ ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் வாங்கியிருக்காராமே, அவர் யாரென்றே எனக்கு தெரியாது,  பாரத ரத்னா போன்ற விருதுகள் என் தந்தை என்டிஆரின் சுண்டுவிரலுக்கு சமம் என பேசினார்.

rahman-balakrishna 1

அவர் ஆஸ்கர் வாங்கியதெல்லாம் பெரிய விஷயமல்ல, எனது குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைகளுக்கு எந்த விருதும் ஈடாகாது என கூறியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் மட்டுமல்லாமல் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ஆகியோரையும் அவர் விமர்சித்துள்ளார்.

இவரது பேச்சுக்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு ரசிகர்களே பாலகிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


தெலுங்கு நடிகர்களுக்கு இவ்வளவு தலைக்கணம் கூடாது என்று கூறுகின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 1993இல் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான நிப்பு ரவ்வா படத்திற்கு பின்னணி இசை ஏ.ஆர்.ரஹ்மான் தான்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP