பிறந்த 3 நாட்களிலேயே தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை !!

பிறந்த 3 நாட்களிலேயே தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை !!

பிறந்த 3 நாட்களிலேயே தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை !!
X

நாகை மாவட்டம் , திருக்குவளை வட்டம், கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட அய்யூர் சொக்கநாதர் கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்றினை மர்ம நபர்கள் குளத்தின் கரையில் வீசி சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்தப் பச்சிளம் குழந்தையை மீட்டெடுத்துள்ளனர். பின்னர் திருக்குவளை காவல் துறையினருக்கும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்த நிலையில் உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டது.

அங்கிருந்து குழந்தை தற்பொழுது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் மீட்கப்பட்ட அந்த குழந்தை பிறந்து சுமார் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் இருக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மர்மமான முறையில் பச்சிளம் குழந்தை குளக்கரையோரம் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது குறித்து திருக்குவளை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it