அசத்தல் அறிவிப்பு..! தமிழ்நாட்டின் போக்குவரத்து சிஸ்டமே மாறப்போகுது..!
தேசிய போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அறிவிப்புகள்:
- ஈரோடு மாவட்டத்தில், மழைநீர் வடிகால் மற்றும் 2.9 கி.மீ.க்கு மேல் உயர்மட்ட பாலம் திட்டங்கள் உட்பட, SH-20 சாலையை இருவழிப்பாதையாக விரிவுபடுத்துவதற்கு ₹36.45 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாவட்டத்தில், மேட்டுக்கடை-மூத்தம்பாளையம் சாலையை விரைவு சாலை பாதையாக விரிவுபடுத்தி, நீர் நிலைகளில் 4.2 கி.மீ.க்கு தடுப்புச்சுவர் கட்ட, ₹6.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மதுரை மாவட்டத்தில், SH-154 ஐ அகலப்படுத்தவும், பலப்படுத்தவும் ₹18.29 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 6 கிமீ தூரத்திற்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், 9.4 கி.மீத்தொலைவு இணைப்பை மேம்படுத்தும் வகையில், மேலத்தூர்-பத்தலப்பேட்டை சாலையை ஒற்றைப் பாதையிலிருந்து இரு வழியாக மேம்படுத்த ₹20.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் மாவட்டத்தில், தர்மத்துப்பட்டி-ஆடலூர்-தாண்டிக்குடி ரோட்டை விரிவுபடுத்தவும், பலப்படுத்தவும், கால்வாய் புனரமைப்பு மற்றும் தடுப்புச்சுவர் கட்டுதல் போன்ற பணிகளுக்காக 4.4 கி.மீ.க்கு ₹5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாவட்டத்தில், பொள்ளாச்சி-தாராபுரம்-கரூர் சாலை (SH-21) மற்றும் ஈரோடு-முத்தூர்-வெள்ளகோவில் சாலையில் 2 உயர்மட்ட பாலங்கள் கட்டுவதற்கு ₹9.22 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில், கன்னங்குடி சாலை வழியாக தேவகோட்டை-புதுக்கோட்டை மாவட்ட எல்லைச் சாலையில் உயர்மட்ட பாலம் கட்ட ₹8.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில், போக்குவரத்து உள்கட்டமைப்பை உறுதி செய்வதற்காகக் கட்டப்பட உள்ள பாலத்திற்கு ₹5.89 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில், உப்பூர்-கோட்டையூர் சாலை (SH-34A) மற்றும் திருவாடானை சாலையில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்ட ₹19.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில், முதுகளத்தூர்-வீரசோழன் சாலையில் உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு ₹10.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கு ₹22.57 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது: ஒன்று திருத்தணி-பூதத்தூர்பேட்டை-பள்ளிப்பேட்டை சாலையில் அமைக்கப்படும், இன்னொன்று திருப்பாச்சூர்-கடம்பத்தூர்-கொண்டஞ்சேரி சாலையில் அமைக்கப்படும்
முக்கிய திட்டம்:
கோயம்புத்தூர் – கரூர் 4 வழிச்சாலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பல்லடம் வரை ஏற்கனவே முடியும் நிலையில் உள்ளது.
பல்லடம் முதல் வெள்ளக்கோவில் வரை கிட்டத்தட்ட பணிகள் முடிந்துவிட்டது. இடையே தரைவழி பாலங்கள், சுரங்கங்கள் அமைக்கும் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன.
வெள்ளக்கோவில் முதல் கரூர் வரை ஒரு பக்கம் பணிகள் முடிந்து உள்ளன. இன்னொரு பக்கம் பணிகள் நடந்து வருகின்றன. வாகனங்களின் அபரிமிதமான எண்ணிக்கையின் காரணமாகப் பெருகிவரும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, NHAI சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கத் திட்டத்தை முன்வைத்தது. இதையடுத்து NHAI அதிகாரிகள், போக்குவரத்தின் அளவை அளவிடுவதற்கும் புதிய சாலையின் சீரமைப்பைக் கண்டறிவதற்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்தத் திட்டம் NHAI கூட்டங்களில் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து இருந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தத் திட்டத்தின் பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன.