ஹெல்மெட் போடல… ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.200 அபராதம்..!

 | 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேட்டுத்தெருவில் வசிப்பவர் குருநாதன். ஆட்டோ டிரைவரான இவர் 20 வருடங்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு 7 மணியளவில் அவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

அதில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் சென்றதாகவும், வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை எனவும், ஹெல்மெட் போடவில்லை எனவும் தெரிவித்த போக்குவரத்து போலீசார் 200 அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாளில் குருநாதன் மதுரைக்கே செல்லாத நிலையில், இதுபோன்ற எஸ்எம்எஸ் வந்துள்ளதால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் மூலமாக கும்பகோணம் போக்குவரத்து போலீஸாரிடம் முறையிடப்பட்டது. அதற்கு, சம்பந்தப்பட்ட எஸ்எம்எஸ் தகவலை ஆய்வு செய்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP