அன்று ஆசிரியர்... இன்று தள்ளுவண்டி வியாபாரி!

அன்று ஆசிரியர்... இன்று தள்ளுவண்டி வியாபாரி!

அன்று ஆசிரியர்... இன்று தள்ளுவண்டி வியாபாரி!
X

டெல்லியில் பள்ளி ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தற்போது தள்ளுவண்டியில் காய்கறி விற்று வருகிறார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் சம்பளம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே கஷ்டப்பட்டு வருகின்றனர். பல தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கட்டணத்தை கட்ட சிரமப்பட்டு வருகின்றனர். கட்டணம் வாங்காததால் சம்பளம் கொடுக்க பள்ளி நிர்வாகங்கள் திணறி வருவதாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில் டெல்லியில் சர்வோதயா பால் வித்யாலயா பள்ளியில் ஒப்பந்த ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்த வசிர் சிங் என்பவர்  தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால்  தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். மே 8 முதல் தனக்கு சம்பளம் வரவில்லை என்பதால் வேறுவழியின்றி காய்கறி விற்பனையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.     

newstm.in

Next Story
Share it