உ.பி.யில் மீண்டும் கொடூரம்.. ஜீன்ஸ் பேண்ட் அணிந்த சிறுமி அடித்தே கொலை !!

 | 

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அமர்நாத் பஸ்வான் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பின்னர் வேலை நிமித்தமாக தனது மனைவி, 17 வயது மகளுடன் பஞ்சாப் மாநிலம் சென்றார். அங்கு சிறிது காலம் தங்கியிருந்த பணிபுரிந்த அமர்நாத் பஸ்வானின் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

அவரது 17 வயது மகள் பஞ்சாப் சென்றப்பின்னர் ஜீன்ஸ் பேண்ட் அணியத் தொடங்கினார். அது அவருக்கு பிடித்து இருந்ததால் கிராமத்துக்கு சென்ற பிறகும் ஜீன்சை அணிந்தார். இதற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த் அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜீன்ஸ் பேண்டை அணியக் கூடாது என்றும் அன்றாம் அணியும் உடையை தான் அணிய வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால் அதற்கு சிறுமி மறுத்து விட்டாள். இதனால் ஆத்திரம் அடைந்த தாத்தா உள்ளிட்ட உறவினர்கள் சிறுமியை கொடூரமாக தாக்கினார்கள். சுவற்றில் மோதியும், கடுமையாக அடித்து உதைத்ததிலும் அச்சிறுமி உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை ஆட்டோவில் தூக்கி சென்று அங்குள்ள மேம்பாலத்துக்கு கீழே தொங்கவிட்டுவிட்டு தப்பியோடினர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதன்பேரில் சிறுமியை கொன்ற அவரது தாத்தாவையும், உடலை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவரையும் கைது செய்தனர். சிறுமியை கொலை செய்த மற்ற உறவினர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடி வருகிறனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP