1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் எந்த வயதினருக்கு , கொரோனா பாதிப்பு அதிகம் ?

சென்னையில் எந்த வயதினருக்கு , கொரோனா பாதிப்பு அதிகம் ?


சென்னையில் இதுவரை மொத்தம் 303 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 80 பேர் குணமடைந்து உள்ளனர். அதிகபட்சமாக ராயபுரத்தில் 92 பேரும், திருவிக நகரில் 39 பேரும், தேனாம்பேட்டையில் 38 பேரும், தடையார்ப்பேட்டையில் 37 பேரும், கோடம்பாக்கத்தில் 31 பேரும், அண்ணாநகரில் 27 பேரும் உள்ளனர்.

மேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவொற்றியூரில் 5 பேரும், ஆலந்தூரில் 5 பேரும், மாதவரத்தில் 3 பேரும்,  சோழிங்கநல்லூரில் 2 பேரும் உள்ளனர். சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 65.23% பேரும், பெண்கள் 34.77% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 64 பேருக்கு தொற்று உள்ளது.

குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 4 நபரும், 80 வயதுக்கு மேல் 7 நபரும் பாதித்து உள்ளனர். 10 முதல் 19 வயதுள்ளோர் 21 பேருக்கும், 20 முதல் 29 வயதுள்ளோர் 49 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 56 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 53 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 32 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 16 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு முதல் கட்டமாக வழங்கப்பட்ட 6000 ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் இதுவரை 1000 பேரிடம் பரிசோதிக்கப்பட்டு உள்ளதில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா அறிகுறிகள் உள்ளதா என வீடு வீடாக இதுவரை 2 கோடியே 57 லட்சத்து 4 ஆயிரத்து 19 பேருக்கு அறிகுறிகள் பரிசோதனை செய்ததில் 610 பேருக்கு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like