தமிழகத்தில் 8 நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 8 நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 8 நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா பாதிப்பு!
X

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 3,793 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 3,827 பேருக்கு தொற்று ஏற்பட்டது. பாதிப்பும், குணமடைந்தோரும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்தது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 66,571 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 46,833 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 571ஆக அதிகரித்துள்ளது. இதில் நம்பிக்கை அளிக்கும் விஷயம் என்னவென்றால், நான்கு நாட்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. 

அதனால் இனிவரும் காலங்களில் தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் 28ஆம் தேதி நிலவரப்படி 3,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் 8 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு இறங்குமுகத்துக்கு வந்துள்ளது.

newstm.in

Next Story
Share it