1. Home
  2. தமிழ்நாடு

#Breaking News ; ஆகஸ்ட் 12 ம் தேதி வரை , அனைத்து ரயில்களும் ரத்து !!

#Breaking News ; ஆகஸ்ட் 12 ம் தேதி வரை , அனைத்து ரயில்களும் ரத்து !!


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது ஊரடங்கு பல மாநிலங்களில் அமலில் உள்ளது. பொது போக்கு வரத்துகளையும் மத்திய அரசு நிறுத்தியது.

பின்பு புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ப்ல்வேறு மாநிலங்களில் இருந்து கோரிக்கை வந்ததால் , சிறப்பு ரயில் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதற்கும் பல கட்டுப்பாடிகளை விதித்தது ரயில்வே நிர்வாகம்.

முன் கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் , காய்ச்சல் , சளி இருக்க கூடாது.  பரிசோதனை செய்த பின்பு தான் அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ,

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் இந்த கால கட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் , ஆக. 12-ம் தேதி வரையிலான பயனத்திற்க்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like