1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING:- பெரும் அதிர்ச்சி.. குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் பலி?

#BREAKING:- பெரும் அதிர்ச்சி.. குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் பலி?


குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. ராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்துகொண்டு இருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

#BREAKING:- பெரும் அதிர்ச்சி.. குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் பலி?

விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவத் தலைமைத் தளபதி நரவணே ஆகியோரும் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி உறுதியாகத் தெரியவில்லை. உடனடியாக உயிரிழப்புகள் பற்றி எதுவும் உறுதி செய்ய இயலவில்லை. நஞ்சப்ப சத்திரம் அருகே ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில், நீலகிரியில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக நீலகிரி ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 ராணுவ உயரதிகாரிகளின் நிலை என்னவானது என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

newstm.in

Trending News

Latest News

You May Like