சாத்தான் குளம் சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்ட ஆயுதப்படை காவலர் !! தற்காலிக பணியிடை நீக்கம்...

சாத்தான் குளம் சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்ட ஆயுதப்படை காவலர் !! தற்காலிக பணியிடை நீக்கம்...

சாத்தான் குளம் சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்ட ஆயுதப்படை காவலர் !! தற்காலிக பணியிடை நீக்கம்...
X

சாத்தான் குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் விசாரனைக்கு அழைத்து செல்லப்பட்டு திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக் கைதிகள் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

இது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ் முத்து என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் சாத்தான்குளம் நிகழ்வை பற்றி ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.

அப்பதிவானது காவல்துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது குறித்து அவரை விசாரித்ததில் தனது முகநூல் கணக்கு மற்றும் அதன் இரகசிய குறியீடு(Password) ஆகியவற்றை தனது நண்பர்களிடம் பகிர்ந்திருந்ததாகவும் , தனக்கு தெரியாமல் யாரோ அப்பதிவினை பதிவிட்டதாக கூறினார்.

இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு , காவல்துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்திய காரணத்திற்காக காவலர் சதீஸ் முத்து அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it