சலூன்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதா.? - மத்திய அரசு விளக்கம்..

சலூன்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதா.? - மத்திய அரசு விளக்கம்..

சலூன்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதா.? - மத்திய அரசு விளக்கம்..
X

சிறிய கடைகள் திறக்க மட்டுமே அனுமதி, இந்த அனுமதி சலூன்களுக்கு பொருந்தாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஊரடங்கு விதித்த நாள் முதல் சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலோனார் முடிவெட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கத்தைவிட அதிகளவு முடிவளர்த்து அதனை முறையாக பராமரிக்க முடியாமல் திணறுவதாக சமூக வலைதளங்களில் புலம்புகின்றனர். 

ஒருசிலர் சுயமாக முடிதிருத்தம் செய்கின்றனர். ஒருசிலருக்கு அவர்களது மனைவி முடிதிருத்தம் செய்கின்றனர். மத்திய அரசு புதிய நிபந்தனையில் சலூன் கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள சந்தைகளில் செயல்படும் கடைகள் ஆகியவற்றை திறந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தனித்தனியாக செயல்படும் கடைகளையும் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திறந்திருக்கும் கடைகளில் 50 சதவீத அளவு ஊழியர்கள் முககவசத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில் வணிக வளாகங்களில் செயல்படும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மத்திய அரசின் அறிவிப்பால் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சிறிய முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மாநில அரசால் முழு அடைப்பு அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு இந்த தளர்வு பொருந்தாது. பதிவு சட்டத்தின் கீழ் மதுக்கடைகள் வராது என்பதால் அதற்கு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை.

சிறிய கடைகளுக்கு அனுமதி என்ற தகவலால், சலூன் கடைகளை திறக்க அனுமதி என்ற செய்திகள் பரவின. 

இதனை அடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள, மத்திய உள்துறை இணைச்செயலாளர் புன்ய சாலிய ஸ்ரீவஸ்தவா, மத்திய அரசின் சமீபத்திய உத்தரவு பொருட்களை விற்கும் கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் இதில் வராது. எனவே, சலூன்கள், மதுக்கடைகளை திறக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

newstm.in 

Next Story
Share it