1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பீங்க..! பிரபல வங்கியில் 400 காலியிடங்கள் அறிவிப்பு..!

1

பேங்க் ஆஃப் இந்தியாயில் காலியாகவுள்ள 400 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்  கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

  • அப்ரண்டிஸ் (Apprentices) – 400 காலியிடங்கள்

வகை வாரியாக / மாநில வாரியாக காலியிடங்கள்:

மாநிலம் மொத்த காலியிடங்கள்
பீகார் 29
சத்தீஸ்கர் 5
டெல்லி 6
குஜராத் 48
ஜார்கண்ட் 30
கர்நாடகா 12
கேரளா 5
மத்தியப் பிரதேசம் 52
மகாராஷ்டிரா 62
ஒடிசா 9
ராஜஸ்தான் 18
தமிழ்நாடு 7
திரிபுரா 7
உத்தரப் பிரதேசம் 43
மேற்கு வங்காளம் 52
மொத்தம் 400

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் 01.04.2021 மற்றும் 01.01.2025 க்கு இடையில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 வயது அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு விவரங்கள்:

வகை வயது தளர்வு
SC / ST 5 ஆண்டுகள்
OBC 3 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) 10 ஆண்டுகள்
PwBD (SC/ ST) 15 ஆண்டுகள்
PwBD (OBC) 13 ஆண்டுகள்

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அப்ரண்டிஸ் பணிக்கு மெட்ரோ கிளைகளில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.15,000/- வழங்கப்படும். நகர்ப்புற கிளைகளில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.12,000/- வழங்கப்படும். கிராமப்புற / அரை நகர்ப்புற கிளைகளில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

  1. ஆன்லைன் எழுத்துத் தேர்வு
  2. உள்ளூர் மொழியின் அறிவு மற்றும் சோதனை

விண்ணப்பக் கட்டணம்:

  • பெண் / SC / ST விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.600/-
  • GEN / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.800/-
  • PwBD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.400/-

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.03.2025 முதல் 09.03.2025 தேதிக்குள் https://bankofindia.co.in/ இணையதளத்தில் சென்று “Apply Online” பட்டனை கிளிக் செய்து NATS இணையதளத்தில் “Student” ஆக Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Trending News

Latest News

You May Like