1. Home
  2. தமிழ்நாடு

முழு ஊரடங்கு பற்றி அறிவிப்பா ? தமிழக முதலமைச்சர் இன்று மாலை 6 மணிக்கு மக்களிடம் உரை...

முழு ஊரடங்கு பற்றி அறிவிப்பா ? தமிழக முதலமைச்சர் இன்று மாலை 6 மணிக்கு மக்களிடம் உரை...


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 800 - க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதன் பாதிப்பு சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாகி வந்ததால் , இந்த மாவட்டங்களுக்கு 12 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

முழு ஊரடங்கு பற்றி அறிவிப்பா ? தமிழக முதலமைச்சர் இன்று மாலை 6 மணிக்கு மக்களிடம் உரை...

இதை தவிர்த்து மதுரை , தேனி மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகி கொண்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து தேனியிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சி மூலமாக இன்று மாலை 6 மணிக்கு மக்களிடம் உரையாற்றுகிறார். இதில் முழு ஊரடங்கு பற்றி அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

Newstm.in

Trending News

Latest News

You May Like