அண்ணா பல்கலைக் கழக மாணவர் விடுதிகளை காலி செய்து , ஜூன் 20ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் !! சென்னை மாநகராட்சி

X

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக் கடங்காமல் உள்ளது.

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த ஏற்கனவே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் உள்பட பல இடங்கள் தனிமைப்படுத்துதல் முகாமாக மாற்றப்படுகிறது.

வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சென்னை மாநகராட்சி கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

மாணவர் விடுதிகளில் கொரோனா முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் விடுதியை காலி செய்து விட்டு ஜூன் 20ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  பல்கலைக்கழக பதிவாளருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

Newstm.in

Next Story
Share it