மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி !

மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி !

மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி !
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ செங்குட்டுவன் மற்றும் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் காந்தி என நேற்று முன் தினம் ஒரேநாளில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று உறுதியானது. நேற்று ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்க பாண்டியனுக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதேபோல் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மற்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அதிமுக சட்டபேரவை உறுப்பினர் கோவிந்தராஜ்-க்கு இன்று தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரையும் சேர்த்து தமிழகத்தில் 3 அமைச்சர்கள் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

newstm.in 

Next Story
Share it