அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பு; பன்வாரிலால் புரோகித், மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

 | 
பாமக நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் - சவுமியா ஆகியோரின் மகளுமான சங்கமித்ராவுக்கும், சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த தனசேகரன் - கலைவாணி தம்பதியினரின் மகன் ஷங்கர் பாலாஜிக்கும் சென்னையில் கடந்த 1ம் தேதி திருமணம் நடைபெற்றது.

பன்வாரிலால்


சங்கமித்ரா - ஷங்கர் பாலாஜி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, திமுக எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கனிமொழி, தயாநிதி மாறன், கதிர் ஆனந்த், டாக்டர் கலாநிதி வீராசாமி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP