போதையில் அராஜகம் செய்த போலீஸ்... கண்ணீர் வடிக்கும் மக்கள்!

போதையில் அராஜகம் செய்த போலீஸ்... கண்ணீர் வடிக்கும் மக்கள்!

போதையில் அராஜகம் செய்த போலீஸ்... கண்ணீர் வடிக்கும் மக்கள்!
X

காவல்துறையின் அத்துமீறல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது, ஒரு சில சம்பவங்கள் வெளியே தெரிந்தாலும் பெரும்பாலான அத்துமீறல்கள் தெரிவதில்லை.

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தின் மவானா நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் போலீஸ் படை புகுந்து வீட்டிற்குள்ளிருந்த பொருட்களை கொள்ளையடித்ததாக அந்த குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். ராஜோ வாலா பாக் பகுதியில் சட்டவிரோதமாக விலங்குகளை கொன்றதாக கூறி காவல்துறையினர் அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர் . அப்போது உமர் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த போலீசார் அவர் எங்கே என்று கேட்டு வீட்டிலுள்ளவர்களை கொடுமை படுத்தியதாக தெரிகிறது. 


காவல்துறையினர் வீட்லுள்ள பொருட்களை உடைத்ததாகவும் ,பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அப்போது அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததால் பொருட்களை உடைக்கும்போது நடனமாடியதாகவும் வீட்டிலிருந்தவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் குற்றச்சாட்டை போலீஸ்காரர்கள் மறுக்கின்றனர். அந்த பகுதியில்  விலங்குகளை கொன்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தியதாக விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

Next Story
Share it