சோகத்தில் முடிந்த சாகசம்! மின்சார ரயிலில் சாசகம் செய்த கல்லூரி மாணவன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்கிற இளைஞர் பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படித்துவருகிறார்.
இவர் வழக்கமாக கல்லூரிக்கு ரயிலில் சென்றுவருவதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் அபிலாஷ், கல்லூரி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயிலின் ஏறும் வழியில் தொங்கியபடி அவர் சாகசம் செய்துள்ளார்.இதனை அவரது நண்பர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அபிலாஷ் தலை ரயில் பாதையில் இருக்கும் மின் கம்பத்தில் மோதி அவர் தூக்கி வீசப்பட்டார்.
கடந்த 9ம் தேதி நடந்த விபத்து தொடர்பான காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விபத்து குறித்து ராயபுரம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
⚠️Content W@rning
— Spark Media (@SparkMedia_TN) October 13, 2024
சோகத்தில் முடிந்த சாகசம்!
சென்னை - ஓடும் மின்சார ரயிலில் படியில் தொங்கி சாசகம் செய்த கல்லூரி மாணவன் அபிலாஷ் (16) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி#Chennai #Train #SparkMedia pic.twitter.com/nSm37EAvZ3