1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ.30 கோடி மதிப்புள்ள அம்மன் சிலை மீட்பு !

தமிழகத்தில் ரூ.30 கோடி மதிப்புள்ள அம்மன் சிலை மீட்பு !

தமிழகத்தில் தொடர்ந்து பழங்கால சிலைகள் கடத்தப்பட்டு வருகின்றன. புராதன சிலைகளை வருடக்கணக்கில் திருடி, வெளிநாடுகள் விற்று வரும் அவலத்தை சமீபத்தில் போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பழம்பெரும் ஆலயங்களில் உள்ள சிலைகள் எல்லாம் கடத்தப்பட்டு விற்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்த நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே உள்ள கெங்கவல்லிப் பகுதியில் சிலா் கோயிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலையை விற்க முயற்சிப்பதாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் கெங்கவல்லிப் பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் (47) என்பவரை பிடித்து விசாரணை செய்தனா்.

அதில், அவரிடமிருந்த ஒன்றரை அடி உயரத்துடன் ஆறரை கிலோ எடையுள்ள தொன்மையான அம்மன் சிலையை போலீசா மீட்டனா். இந்தச் சிலையின் சா்வதேச மதிப்பு ரூ.30 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமாா் சிங் சென்னையில் அளித்த பேட்டி: போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலையை மீட்டு, ராஜசேகா் என்பவரைக் கைது செய்துள்ளோம். கைப்பற்றப்பட்ட சிலை எந்தக் கோயிலில் திருடப்பட்டது என்பது குறித்து அடுத்த கட்டமாக விசாரணை நடத்த உள்ளோம்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like