தாத்தா வயது நடிகருடன் ஜோடி சேரும் அமலா பால்... எல்லாம் பணம் தான்!

தாத்தா வயது நடிகருடன் ஜோடி சேரும் அமலா பால்... எல்லாம் பணம் தான்!

தாத்தா வயது நடிகருடன் ஜோடி சேரும் அமலா பால்... எல்லாம் பணம் தான்!
X

கேரளாவை சேர்ந்த நடிகை அமலா பால் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலம். மைனா பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன. இதனிடையே இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருணம் செய்து  கொண்ட அமலா பால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். 

அதன்பிறகு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், ஆடை படத்தில் நடித்து பெரிதும் பேசப்பட்டார். உடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் பாடகர் ஒருவரை அமலா பால் திருமணம் செய்து கொண்டார் என்று புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து அவர் எதுவும் கூறவில்லை. 

இந்த சூழலில் தான் அமலா பால் தாத்தா வயது நடிகருடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு திரையுலகில் 60 வயதானாலும் ஹீரோவாக நடித்து வருபவர் பாலகிருஷ்ணா. அவரது படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை என்றாலும் கூட தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிக்கிறார். அந்த வகையில் தற்போது பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பேசி உள்ளார் என கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it