1. Home
  2. தமிழ்நாடு

சாராய விற்பனை ஜோர்... தடுத்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு!

சாராய விற்பனை ஜோர்... தடுத்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு!


வேலூர் அருகே சாராய விற்பனையை தடுத்த கிராம மக்கள் மீது மலைக் கிராமத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அடுக்கம்பாறை அருகே சோழவரம் கிராமம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்ற விவசாயி வீட்டு வழியாக சென்று மலை கிராம மக்கள் சாராயம் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கராஜ், மலைக் கிராமத்திற்கு செல்லும் மண் சாலையில் கம்புகளால் தடுப்பு வேலி அமைத்துள்ளார். இதையறிந்த மலைக் கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கும்பல் நாட்டுத்துப்பாக்கி, கத்தி, அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து தங்கராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விநாயகம் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டனர். 


தங்கராஜை தலை, முதுகு, கால்கள் ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டினர். மேலும் தங்கராஜ் மற்றும் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளை மலைக் கிராம கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடினர். அவர்களை, தடுக்க முயன்றவர்கள், எதிர்த்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். படுகாயம் அடைந்த தங்கராஜ், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

Trending News

Latest News

You May Like