சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ” நோ ” சொன்ன நடிகர் அஜித் !!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ” நோ ” சொன்ன நடிகர் அஜித் !!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ” நோ ” சொன்ன நடிகர் அஜித் !!
X

நடிகர் அஜித் , எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆக்சன் , கமர்சியல் படமாக உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஊரடங்கு உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக இருந்த வலிமை படம் அடுத்த வருடத்திற்கு தள்ளிச் சென்றது.

இதனால் தல ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இதனால் 2020ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாத ஆண்டாக மாறிவிட்டது. இந்த இடைப்பட்ட காலங்களில் தல அஜித், தல 61 படத்திற்கான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று அஜீத்தை வளைத்துப் போட நினைத்து ஏமாற்றம் அடைந்துள்ளது. இதுவரை சிறிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் முதன் முறையாக மிகப் பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க உள்ளது.

மேலும் தல அஜித் முதன் முறையாக பெண் இயக்குனர் படத்திலும் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் தல 61 படத்தை கோகுலம் பிலிம்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தல அஜித்தை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க போட்டி போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அஜித் கால்ஷீட் தரவில்லையாம். இதனால் அந்த நிறுவனம் பெரும் வருத்தத்தில் உள்ளது.

Newstm.in

Next Story
Share it