விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு – 393 காலியிடங்கள்... 12-ம் வகுப்பு, டிகிரி போதும்..!

AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு அனுபவம் தேவையில்லை. கல்லூரி படிப்பபை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.07.2025 (கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது) தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Security Screener (Fresher) செக்யூரிட்டி ஸ்க்ரீனர் |
230 |
Assistant (Security), உதவியாளர் |
166 |
கல்வித் தகுதி
இந்திய விமான நிலைய ஆணையம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்:
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Security Screener (Fresher) ஆட்சேர்ப்பு வாய்ப்பு செக்யூரிட்டி ஸ்க்ரீனர் |
(அ) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவது ஒரு டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். – பொது/EWS/OBC விண்ணப்பதாரர்கள்: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். – ST/SC விண்ணப்பதாரர்கள்: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். |
Assistant (Security), உதவியாளர் |
(அ) அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். – General விண்ணப்பதாரர்கள்: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். – SC/ST விண்ணப்பதாரர்கள்: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். |
வயது வரம்பு
இந்திய விமான நிலைய ஆணையம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பு தளர்வு:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
Security Screener (Fresher) செக்யூரிட்டி ஸ்க்ரீனர் |
முதல் வருடம்: ரூ. 30,000/- இரண்டாம் வருடம்: ரூ. 32,000/-மூன்றாம் வருடம்: ரூ. 34,000/- |
Assistant (Security), உதவியாளர் |
முதல் வருடம்: ரூ. 21,500/- இரண்டாம் வருடம்: ரூ. 22,000/-மூன்றாம் வருடம்: ரூ. 22,500/- |
தேர்வு செயல்முறை
இந்திய விமான நிலைய ஆணையம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- Short Listing (குறுகிய பட்டியல்)
- Online Interview (ஆன்லைன் நேர்காணல்)
விண்ணப்பக் கட்டணம்:
Security Screener (Fresher) பதவிக்கு
ST/ SC/ Female/ EWS விண்ணப்பதாரர்களுக்கு – Rs.100/-
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – Rs.750/-
Assistant (Security) பதவிக்கு
ST/ SC/ Female/ EWS விண்ணப்பதாரர்களுக்கு – Rs.100/-
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – Rs.500/-
எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.aai.aero இணையதளத்தில் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.06.2025 முதல் 07.07.2025 (கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.