ஊரடங்கின் போது விமான பயணமா? சர்ச்சையில் சிக்கிய பிரஷாந்த் கிஷோர்!

ஊரடங்கின் போது விமான பயணமா? சர்ச்சையில் சிக்கிய பிரஷாந்த் கிஷோர்!

ஊரடங்கின் போது விமான பயணமா? சர்ச்சையில் சிக்கிய பிரஷாந்த் கிஷோர்!
X

ஊரடங்கு காலத்தில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், சரக்கு விமானம் மூலம் டெல்லியிலிருந்து கொல்கத்தா சென்றாரா என்று மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் சூழலில் பிரசாந்த் கிஷோரிடம் மம்தா ஆலோசனை கேட்டதாக தெரிகிறது. எனவே, சரக்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் சூழலில், அதன் மூலம் பிரசாந்த் கிஷோர் டெல்லியிலிருந்து கொல்கத்தா சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது. எனினும் இந்த குற்றச்சாட்டை பிரசாந்த் கிஷோர் மறுத்துள்ளார். மார்ச் 19 ஆம் தேதிக்குப் பிறகு எந்த விமான நிலையத்துக்கும் தாம் செல்லவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it