1. Home
  2. தமிழ்நாடு

அரசைத் தொடர்ந்து தனியாரும் அறிவிப்பு.. ஆனால் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் கிடையாது !

அரசைத் தொடர்ந்து தனியாரும் அறிவிப்பு.. ஆனால் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் கிடையாது !


தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க வரும் ஜூன் 30ஆம்  தேதி வரை 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. 

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் அரசு பேருந்துகள் இயங்கவும் அரசு அனுமதி அளித்தது.

அதேபோல் இந்த 4 மாவட்டங்களை தவிர மற்ற வழித்தடங்களில் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும். குறிப்பிட்ட மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 4,400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

அப்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்ட அரசின் விதிகள், கட்டுப்பாடுகளை பின்பற்றுவோம் எனவும் அவர் கூறினார்.  

newstm.in 

Trending News

Latest News

You May Like