1. Home
  2. தமிழ்நாடு

ஜூலை 5க்கு பிறகு சென்னையில் எவை இயங்கும், எவை இயங்காது? முழு விவரம்!

ஜூலை 5க்கு பிறகு சென்னையில் எவை இயங்கும், எவை இயங்காது? முழு விவரம்!


தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதிவரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் ஜூலை 5ஆம் தேதி வரை முழு முடக்கம் இருக்கும் என்றும், அதன்பிறகு தளர்வுகள் இருக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஜூலை 5க்கு பிறகு சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவை இயங்கும், எவை இயங்காது என்று விரிவாக பார்க்கலாம். 

காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கு அனுமதி.

தேநீர் கடைகள், உணவு விடுதிகளுக்கு காலை 6 மணி முதல் இரவு எட்டு மணி வரை அனுமதி. ஏசி இயக்கப்படக்கூடாது. 50% இடங்களில் உட்கார்ந்து உணவு அருந்தலாம். 

மீன் கடைகள், இறைச்சி கடைகள் திறந்திருக்க அனுமதி. தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். 

வணிக வளாகங்கள் இயங்காது. அவை தவிர்த்து அனைத்து ஷோ ரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம். 

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகபட்சம் 80 பணியாளர்களுடன் இயங்கலாம்.

ஜூலை 5ஆம் தேதி முதல் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்.

திரையரங்குகள், ஜிம், நீச்சல் குளங்கள், அருங்காட்சியங்கள் போன்ற இடங்களுக்கு அனுமதி இல்லை.

சலூன், அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதி இல்லாமல் இயங்க அனுமதி

வாடகை மற்றும் டாக்சி வாகனங்கள் இயங்கும். ஓட்டுநர் தவிர்த்து மூன்று பேர் அமர்ந்து பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பேர் அமர்ந்து செல்லலாம். சைக்கிள் ரிக்ஷாக்களுக்கும் அனுமதி.

அரசுப் பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் இயங்காது.

newstm.in

Trending News

Latest News

You May Like