இந்த மாவட்டங்களில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தல்..!! 

 | 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறு, ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு பெய்யலாம். இதனால், இந்த 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நீர்நிலைகளின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP