லாக்டவுனில் சமையல் செய்து அசத்திய நடிகர் சூர்யா... வைரல் புகைப்படம்!

லாக்டவுனில் சமையல் செய்து அசத்திய நடிகர் சூர்யா... வைரல் புகைப்படம்!

லாக்டவுனில் சமையல் செய்து அசத்திய நடிகர் சூர்யா... வைரல் புகைப்படம்!
X

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, லாக்டவுனில் சமையல் செய்த புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா - ஜோதிகா தமிழ்நாட்டின் கியூட் ஜோடி. சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பலரும் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது வீட்டில் சமைக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. பெரிய பாத்திரத்தில் சூர்யா சமைத்துக் கொண்டிருக்கும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

newstm.in

Next Story
Share it