முன்னாள் அமைச்சரிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை வழக்கு..!

 | 

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. ‘நாடோடிகள்’ படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன் - மனைவி போல் வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுப்பதுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார், என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி வழக்கு தொடர்ந்துள்ளார். 

சென்னையில் இருந்து கொண்டு வழக்கை நடத்த வேண்டும் என்ற காரணத்தினால் தனக்கு மாதாந்திர இடைக்கால தொகை வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கு அடுத்த மாதம் 5ம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும்போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு கோரலாம் என்ற உத்தரவின் அடிப்படையில் நடிகை சாந்தினி இந்த வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP