நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் பைக் ஓட்டி கீழே விழுந்த சம்பவம் !! வீடியோ வெளியீடு..
கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான யு டர்னில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. மேலும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.
2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து வியாபார , விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்திலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ஷ்ரதா ஸ்ரீநாத்.
சமீபத்தில், கிருஷ்ணா மற்றும் லீலா என்னும் தெலுங்கு படத்தில் ப்ரோமோ வெளிவந்து அதன் மூலம் அவர் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , அவர் புல்லட் பைக் முதன் முறை ஓட்டுவதை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
2017ம் ஆண்டு ஜூன் மாதம், அவர் பைக் ஒட்டி சுற்றி வர நினைக்கும் போது கீழே விழுந்து விட்டதாகவும், அப்போது அனைவரும் தன்னை விட , பைக்கிற்கு எதாவது ஆகி விட்டதா என பார்க்க வந்ததாக நகைச்சுவையுடன் பதிவிட்டிருந்தார்.
Newstm.in