நடிகை ஷோபனாவின் பேஸ்புக் முடக்கம் !! ஹேக்கர்கள் கைவரிசை.

நடிகை ஷோபனாவின் பேஸ்புக் முடக்கம் !! ஹேக்கர்கள் கைவரிசை.

நடிகை ஷோபனாவின் பேஸ்புக் முடக்கம் !! ஹேக்கர்கள் கைவரிசை.
X

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை ஷோபனா. பரதநாட்டிய கலையிலும், வல்லவரான ஷோபனா பல்வேறு மேடைகளில் நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷோபனாவின் பேஸ்புக் பக்கத்தை சில விஷமிகள் முடக்கி உள்ளதாகவும், காவல் துறையினர் உதவியுடன் அதனை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகை ஷோபனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான வாரனே அவஷியமுண்டு படத்தில் துல்கர் சல்மான் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்தில் நடிகை ஊர்வசி மற்றும் சுரேஷ் கோபியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மலையாள இயக்குநர் அனூப் சத்யன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகை ஷோபனாவை சுற்றித் தான் திரைக்கதை நகரும். மேலும், 80, 90களில் பார்த்த அளவுக்கு அத்தனை அழகாக ஷோபனா நடித்திருப்பார். இந்த படத்தை சமீபத்தில் பார்த்து விட்டுத்தான் ஹேக்கர்கள் ஷோபனாவின் பேஸ்புக் பக்கத்தை முடக்கியிருப்பார்களோ என்றும் சமூக வலைதளத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டே போனாலும் , ஒரு பக்கம் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே தான் இருக்கிறது.

Newstm.in

Next Story
Share it