ஊரடங்கால் , மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறும் நடிகை !!

ஊரடங்கால் , மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறும் நடிகை !!

ஊரடங்கால் , மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறும் நடிகை !!
X

சிறு வயதிலேயே சில இந்தித் திரைப்படங்களிலும், சில தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின் வங்காளம், தெலுங்கு மற்றும் தமிழகத் திரைப்படத்துறை போன்ற திரைப்படத் துறைகளின் திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டில் இவர் நடித்த மக்தீ எனும் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றார். அவருக்கும் ரோஹித் மிட்டல் என்பவருக்கும் திருமணமானது. ஆனால் திருமணமான வேகத்தில் கணவரை பிரிந்துவிட்டார் ஸ்வேதா. கடந்த டிசம்பர் மாதம் ரோஹித்தை பிரிந்த பிறகு ஸ்வேதா தனது பெற்றோரிடம் திரும்பிச் சென்றிருக்கலாம். ஆனால் தனிமை தேவைப்படுகிறது என்று கூறி தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஸ்வேதா வீட்டில் முடங்கியுள்ளார். இதையடுத்து அவர் மனநலம் குறித்து ஆன்லைனில் வீடியோ கால் மூலம் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். இதை ஸ்வேதாவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். லாக்டவுனால் வீட்டில் முடங்கியுள்ளவர்கள் மனநலத்தை பார்த்துக் கொள்ளுமாறு பல பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தான் ஸ்வேதா தெரபிஸ்ட்டை அணுகியுள்ளார். முன்னதாக கணவரை பிரிந்தபோதும் ஸ்வேதா அந்த தெரபிஸ்ட்டிடம் சிகிச்சை பெற்றார். வீட்டில் இருக்கும் நேரத்தில் சமைப்பது, சுத்தம் செய்வது, ஓவியம் வரைவது, பழைய டிவி சீரியல்களை பார்த்து ரசிப்பது என்று நேரத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார் ஸ்வேதா. இவரை போல் பல நடிகர் , நடிகைகளும் வீட்டில் தனிமையில் இருப்பதால் சமூக வலைத்தளங்களில் தங்கள் பொழுதுகளை போக்குகின்றனர்.

Newstm.in

Next Story
Share it