சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா! கொரோனா நேரத்தில் ஏன் இப்படி?

சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா! கொரோனா நேரத்தில் ஏன் இப்படி?

சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா! கொரோனா நேரத்தில் ஏன் இப்படி?
X

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆந்திர மாநில எம்எல்ஏவான நடிகை ரோஜா, அவரது தொகுதிக்கு வரும்போது மக்கள் பூத்தூவி வரவேற்கும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், நகரி தொகுதியில் உள்ள ஒரு வீதியில் குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த ரோஜாவுக்கு அந்த ஊர் மக்கள் தெருவின் இரு பக்கமும் நின்று அவரை மலர்த்தூவி வரவேற்கின்றனர். அந்தக் காட்சி சினிமாவில் உள்ளதைப் போல எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் முகக்கவசம் அணிந்து கொண்டு உள்ள ரோஜா, மக்கள் மலர்த்தூவி வரவேற்பதை மிகவும்  உற்சாகமாக ஏற்றுக் கொண்டு நடந்து வருகிறார்.


அதன் பிறகு அங்குள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றுக்குப் பூஜைப் போட்டு வணங்கிவிட்டு குடிநீர் குழாயை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். அவர் இந்த நேரத்திலும் அச்சம் கொள்ளாமல் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வந்ததற்காகப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். ஆனால் வேறு சிலர் இப்படி சினிமா பாணியில் பூப்போட்டு அவரை வரவேற்பதை விமர்சித்து வருகின்றனர். 

newstm.in

Next Story
Share it