விளம்பர படத்தில் நடித்த நடிகை நயன்தாரா

விளம்பர படத்தில் நடித்த நடிகை நயன்தாரா

விளம்பர படத்தில் நடித்த நடிகை நயன்தாரா
X

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் திரைப்பட படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனால், டாப் ஹீரோஸ் முதல் துணை நடிகர்கள் வரை படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் உள்ளனர். 

இந்த ஊரடங்கில் சிலர், தங்கள் குடும்பத்தினருடன் பொழுதை கழித்தும், சிலர் சமூக வலைத்தளங்களில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவேற்றியும், வீடியோக்களை வெளியிட்டும் வருகின்றனர்.

இன்னும் சிலர், சமூக வலைதள ஊடகங்களுக்கு பேட்டியளித்து ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு இல்லாத நிலையில், தற்போது ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, முக்கியத்துவம் நிறைந்த கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த நயன்தாரா, வீட்டில் சும்மா இப்படியே எப்படி இருப்பது என தற்போது விளம்பர படத்தில் நடிக்க வந்துட்டாரோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவர் தற்போது சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாத்த’, ’நெற்றிக்கண்’, ’மூக்குத்தி அம்மன்’, ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடரும் எனக் கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it