நடிகை அமலா , இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா !!

நடிகை அமலா , இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா !!

நடிகை அமலா , இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா !!
X

நடிகை அமலா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்த பின் நடிப்பதை ஏறக்குறைய நிறுத்தி விட்டார். தற்போது அமலாவிற்கு 52 வயதாகிறது.

இந்த வயதில் மற்ற நடிகைகள் பெரும்பாலும் தங்களின் பேரன் பேத்திகளுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஆனால் அமலாவோ கடினமான உடற்பயிற்சிகளை செய்து ஆச்சரியபட வைத்துள்ளார் . இந்த காணொளியில் இளைஞர்களுக்கு இணையாக பளுவை தூக்கி தோள்பட்டையில் வைத்து அசத்தி வருகிறார் அமலா.

இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால் அமலா உடற்பயிற்சிகள் செய்யும் போது அருகே எந்த பயிற்சியாளரும் உதவியாளரும் இல்லை தானாக ஒரு இடத்தில் கேமராவை ஆன் செய்து அதில் பேசிய படியே உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்.

இந்த காணொளியின் இறுதியில் அமலா உடற்பயிற்சிகளை வீட்டிலிருந்தே கட்டாயம் மேற்கொண்டு ஊரடங்கு நேரத்தை சரியாக செலவிடுங்கள் என்று கேட்டுகொண்டுள்ளார்.நடிகர் மற்றும் அமலாவின் மகனான அக்கினி அகில் இந்த காணொளியின் கமெண்டில் வந்து 'மை சூப்பர்வுமன்' என்று கமெண்டை கொடுத்து லைக்கும் போட்டுள்ளார். 

Newstm.in

Next Story
Share it