காவல் துறையினருக்கு உதவிய நடிகர் யோகி பாபு !! குவியும் வாழ்த்துக்கள்.

காவல் துறையினருக்கு உதவிய நடிகர் யோகி பாபு !! குவியும் வாழ்த்துக்கள்.

காவல் துறையினருக்கு உதவிய நடிகர் யோகி பாபு !! குவியும் வாழ்த்துக்கள்.
X

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் , பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தி நடைமுறையில் உள்ளது. அது போல் இந்தியாவில் இதுவரை 24 ஆயிரம் பேர் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பலரும் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கின்றனர். சில நடிகர் , நடிகைகள் பொதுமக்களுக்கும் , தான் சார்ந்த திரையுலகினருக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பற்ற 24 மணி நேரமும் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் தங்கள் குடும்பங்களை விட்டு , விட்டு உழைத்துக் கொண்டிருக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் , சட்ட ஒழுங்கு போலீசாருக்கும் நடிகர் யோகி பாபு N95 மாஸ்க் மற்றும் எனெர்ஜி பானங்களை வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளார். யோகி பாபுவின் இந்த செயலுக்கு இவரது ரசிகர்களும் , திரையுலகை சார்ந்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it