நடிகர் விஜயின் பிகில் படத்தை பல முறை பார்த்தேன் !! பிரதமரின் மகன் டிவிட்

நடிகர் விஜயின் பிகில் படத்தை பல முறை பார்த்தேன் !! பிரதமரின் மகன் டிவிட்

நடிகர் விஜயின் பிகில் படத்தை பல முறை பார்த்தேன் !! பிரதமரின் மகன் டிவிட்
X

விஜய் தனது 10 வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாகக் முதன்மை நடிகராக நடித்தார்.

ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கிய பேரரரசின் நாட்டு திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஒரு பின்னணிப் பாடகராக பம்பாய் சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார். நடிகர் விஜயின் புகழ் இந்தியாவை தாண்டி இலங்கையிலும் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அங்கும் தமிழர்கள் அதிகம் இருப்பதும், தமிழ் படங்கள் அதிகம் ரிலீஸ் ஆவதும் தான் அதற்கு காரணம். மேலும் விஜயின் மனைவி சங்கீதா ஒரு இலங்கை தமிழ் பெண் என்பதால் விஜய் மீது இலங்கை மக்களுக்கு தனி பாசம் உண்டு.

இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்சே தான் தீவிர விஜய் ரசிகர் என ட்விட்டரில் கூறியுள்ளார். அது மட்டுமின்றி விஜய்யின் பிகில் படத்தை எண்ணற்ற முறை பார்த்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார் அவர். இந்தியா போலவே இலங்கையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அங்கு மக்கள் வெளியில் வராமல் இருக்க #7DayChallenge என்ற ஒன்று பிரபலமாகி வருகிறது.

அனைவரும் 7 நாட்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். தான் 7வது நாளாக வீட்டில் இருக்கும் நேரத்தில் பிகில் படம் பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை நாமல் ராஜபக்சே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 7 நாள் சேலஞ்சில் இன்று கடைசி நாள். பெரும்பாலும் நான் வீட்டிலேயே பொழுதை கழித்தேன். எனது பேவரைட் படமான பிகில் படத்தை மீண்டும் பார்த்தேன். விஜய் என்னுடைய ஆல் டைம் பேவரைட் நடிகர்களில் ஒருவர்" என அவர் கூறியுள்ளார்.

Newstm.in

Next Story
Share it